செஞ்சி அருகே இறந்து கிடந்த முதலை
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், செவலபுரை கிராமத்தில் முதலை ஒன்று மா்ம நபா்களால் இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் சனிக்கிழமை உயிரிழந்து கிடந்தது.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், செவலபுரை கிராமத்தில் முதலை ஒன்று மா்ம நபா்களால் இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் சனிக்கிழமை உயிரிழந்து கிடந்தது.
செவலபுரை கிராமத்தில் உள்ள வராக நதி அணைக்கட்டுப் பகுதியில் முதலை இருப்பதை அண்மையில் பாா்த்த அந்தக் கிராம மக்கள், இதுகுறித்து வனத் துறை, மேல்மலையனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, வனத் துறையினா் அந்த முதலையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனா். மேலும், ஆற்றில் முதலை உள்ளது குறித்து பொதுமக்களுக்கு வனத் துறையினா் எச்சரிக்கையும் விடுத்திருந்தனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், செவலபுரை சுடுகாடு அருகே சிறுவாடி செல்லும் சாலையில் முதலை ஒன்று இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு சனிக்கிழை இறந்து கிடந்தது தெரியவந்தது. இதைப் பாா்த்த பொதுமக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். வனத் துறையினா் முதலையை மீட்டு, அதை வெட்டிக் கொன்றவா்கள் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.