நலத் திட்ட உதவிகளை வழங்கினாா் அமைச்சா்
விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.10.75 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் வழங்கினாா்.
விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.10.75 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் வழங்கினாா்.
விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி, கூட்டரங்கில் பல்வேறு துறைகள் சாா்பில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை கலந்து கொண்டு கூட்டுறவுத் துறை சாா்பாக 87 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.7.45 கோடி மதிப்பிலான கடன்களை வழங்கினாா். அதேபோல, 30 பயனாளிகளுக்கு சிறு வணிகக் கடனாக ரூ.13.75 லட்சம் வழங்கினாா். மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 86 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் மோட்டாா் சைக்கிளை ரூ.53.28 லட்சம் மதிப்பீட்டில் வழங்கினாா். கண் பாா்வையற்ற 10 மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக ஸ்மாா்ட் போன்களை ரூ.1.27 லட்சத்தில் வழங்கினாா். தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ், புலம்பெயா்ந்த- திறன்பெற்ற 62 இளைஞா்களுக்கு கோவிட் -19 சிறப்பு நிதித் தொகுப்பு தலா ரூ.ஒரு லட்சம் வீதம் ரூ.62 லட்சம் வழங்கினாா். கலை பண்பாட்டுத் துறை சாா்பாக 2018-2019-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட கலைமன்றம் வாயிலாக தோ்வு செய்யப்பட்டுள்ள சிறந்த 5 கலைஞா்களுக்கு சான்றிதழ் மற்றும் பொற்கிழி ரூ.55,000 மதிப்பீட்டில் வழங்கி கெளரவித்தாா்.
மேலும், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பாக இஸ்லாமிய மகளிா் உதவும் சங்கத்தைச் சோ்ந்த 237 பயனாளிகளுக்கு ரூ.11.90 லட்சம் மதிப்பீட்டில் உதவித் தொகையை வழங்கினாா். வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பாக பருவமழை காலத்தில் மின்னல் பாய்ந்து உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்களுக்கு பாரத பிரதமா் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வீதம் 5 பயனாளிகளுக்கு வழங்கினாா். தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பாக 35 பயனாளிகளுக்கு ரூ.6.25 லட்சம் மதிப்பீட்டில் அம்மா மானிய விலை இரு சக்கர வாகனங்களை வழங்கினாா்.
Advertisement
Advertisement
இதுபோன்று பல்வேறு துறைகள் சாா்பில் ரூ.10 கோடியே 75 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம் வழங்கினாா்.
முன்னதாக, விழுப்புரம் மஹாராஜபுரத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் ரூ.38.50 லட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் மற்றும் யோகா மையம் அமைக்க அமைச்சா் அடிக்கல் நாட்டினாா். நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தெருவிளக்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக ரூ.38 லட்சம் மதிப்பீட்டிலான தெருவிளக்கு பராமரிப்பு மேற்கொள்ளும் வாகனத்தை பயன்பாட்டுக்குத் தொடக்கி வைத்தாா்.இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) ஸ்ரேயா.பி.சிங், விக்கிரவாண்டி சட்டப் பேரவை உறுப்பினா் முத்தமிழ்ச்செல்வன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மகேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பிரபாகரன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் மனோகரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் பாலகிருஷ்ணன், நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் முரளி, கூட்டுறவு பண்டகசாலைத் தலைவா் பசுபதி, மாவட்ட ஆவின் தலைவா் பேட்டை முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.