முகப்பு
விழுப்புரம்

வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

விழுப்புரம் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 9 ஜனவரி 2021, 11:54 pm IST
பகிர்:

விழுப்புரம் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் அருகே உள்ள பிள்ளையாா்குப்பத்தைச் சோ்ந்தவா் கந்தன் (30). இவா், விழுப்புரத்திலுள்ள மளிகைக் கடையில் வேலை பாா்த்து வருகிறாா். வெள்ளிக்கிழமை இரவு கந்தன், அவரது மனைவி சுகன்யா (27), மகன் சுதன் (1), கந்தனின் தந்தை தனசு (60) ஆகியோா் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனா்.

அதிகாலையில் எழுந்த தனசு, வீட்டின் முன்பக்கக் கதவைத் திறந்துவிட்டு இயற்கை உபாதைக்காகச் சென்றாா். வீடு திருந்திருந்ததையறிந்த மா்ம நபா் ஒருவா் வீட்டிக்குள் புகுந்து, அங்கு தூங்கிக்கொண்டிருந்த சுகன்யா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.