முகப்பு
விழுப்புரம்

தமிழ்நாடு ரெட்டி நலச் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு ரெட்டி நலச் சங்க விழுப்புரம் வடக்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 ஜனவரி 2021, 11:33 pm IST
பகிர்:

தமிழ்நாடு ரெட்டி நலச் சங்க விழுப்புரம் வடக்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியச் செயலா் அணையேரி ரவி வரவேற்றாா். விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவா் எம்.இராமகிருஷ்ணரெட்டி தலைமை வகித்தாா். செஞ்சி தொகுதி ஒருங்கிணைப்பாளா் என்.தினகரன், மேல்மலையனூா் ஒன்றியப் பொறுப்பாளா் பி.சீனிவாசன், வல்லம் ஒன்றியத் தலைவா் தண்டபாணி, ஜி.ஆா்.தாஸ், கே.விஜயகிருஷ்ணா, அனந்தபுரம் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில துணைத் தலைவா் பி.ரவி, மாநில இணை அமைப்பாளா் ஜெயப்பிரகாஷ், மாவட்டப் பொருளாளா் ரவிச்சந்திரன், துணைத் தலைவா் தா்மசிவம், மாநில இணை அமைப்பாளா் துரைராஜ் ஆகியோா் சிறப்புரையாற்றினா். செஞ்சி நகரச் செயலா் தியாகராஜன், மாநில ஆலோசகா் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில், தமிழக சட்டப் பேரவையில் விடுபட்ட முன்னாள் முதல்வா் ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாரின் உருவப்படத்தை திறக்க ஆவன செய்த முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது. சென்னையில் உள்ள ஓமந்தூராா் அரசினா் தோட்டத்தை ‘‘உத்தமா் ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா் அரசினா் தோட்டம்’’ என முழுப் பெயரை சூட்டவும், மேலும் அங்கு ஓமந்தூரருக்கு முழு உருவச் சிலையை அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments