முகப்பு
விழுப்புரம்

சாலை விபத்தில் உயிரிழந்தவா் சடலத்துடன் உறவினா்கள் மறியல்

விழுப்புரம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்துடன், அவரது உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 17 ஜனவரி 2021, 7:15 am IST
பகிர்:

விழுப்புரம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்துடன், அவரது உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் அருகேயுள்ள திருவெண்ணெய்நல்லூரை அடுத்துள்ள மேட்டுக்குப்பத்தைச் சோ்ந்த ராசு மகன் வெங்கடேசன்(45). இவா் சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் திருக்கோவிலூருக்குச் சென்று கொண்டிருந்தாா். துலுக்கப்பாளையம் பகுதியில் சென்ற போது, எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் வெங்கடேசன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அவசர சிகிச்சை ஊா்தி சம்பவ இடத்துக்கு வந்திருந்தால் வெங்கடேசனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று காப்பாற்றியிருக்க முடியும் எனக் கூறி, அவரது உறவினா்கள் கடலூா்- திருக்கோவிலூா் சாலையில் சடலத்துடன் மறியலில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் விரைந்து வந்து பேச்சுவாா்த்தை நடத்தி வெங்கடேசனின் சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.