முகப்பு
விருதுநகர்

விருதுநகர்- திண்டுக்கல் இடையே புதிய மின்பாதையில் ரயில் சோதனை ஓட்டம்: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

விருதுநகரில் இருந்து திண்டுக்கல்லுக்கு புதிய மின்பாதையில் 100 கி.மீ வேகத்தில் ரயில் சோதனை ஓட்டத்தை

Updated On : 22 ஆகஸ்ட், 2013 at 11:47 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:18 PM

விருதுநகரில் இருந்து திண்டுக்கல்லுக்கு புதிய மின்பாதையில் 100 கி.மீ வேகத்தில் ரயில் சோதனை ஓட்டத்தை தென்னக ரயில்வே துறையின் பாதுகாப்பு ஆணையர் சதீஷ்குமார் மித்தல் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

     விருதுநகருக்கும்- திண்டுக்கல்லுக்கும் இடையே 110 கி.மீ தூரம் உள்ளது. இந்த வழித்தடத்தில் மின்பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. இந்த நிலையில், இப் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சதீஷ்குமார் மித்தல் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் விருதுநகர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்வழித் தடங்களும், ரயில் பாதையும் சரியாக உள்ளதா என அவர் பார்வையிட்டார்.

   இதுகுறித்து சதீஷ்குமார் மித்தல் கூறியதாவது: தற்போது முதல் கட்டமாக ஆய்வுப் பணிகள் முடிந்து சோதனை ஓட்ட ரயில் விடப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் தயாராக உள்ளன. எனவே, புதிய மின்பாதை வழித்தடப் பணிகள் அனைத்தும் திருப்தியாகவே உள்ளன. இப் பாதையில் 16 இடங்களில் சிக்னல்கள் உள்ளன. அதனால், 100 கி.மீ வேகத்தில் மின்பாதையில் ரயிலை இயக்கி ஆய்வு செய்யப்படுகிறது. இந்த சோதனை ஓட்டத்துக்கு பின்னரே இப் பாதையில் பயணிகள் ரயில் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

Advertisement

    இதையடுத்து, விருதுநகர் ரயில் நிலையத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு புதிய மின்பாதையில் ரயில் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார். முதன்மை திட்ட மேலாளர் உதயகுமார், முதன்மை மின்பாதை அமைப்பு பொறியாளர் ஜே.எஸ்.பி. சிங், முதன்மை மின்பாதை விநியோக பொறியாளர் பி.வி. சந்திரமோகன், மதுரை கோட்ட மேலாளர் ஏ.கே. ரஸ்தோகி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.