முகப்பு
செய்திகள்

உலகக் கோப்பையின் முதல் திருட்டு: ஹைதி தோல்விக்கு ஃபிஃபாவை விமர்சிக்கும் ரசிகர்கள்!

ஸ்காட்லாந்து - ஹைதி கால்பந்து உலகக் கோப்பையின் போட்டியில் நடந்த சர்ச்சை குறித்து...

Updated On : 14 ஜூன் 2026, 6:47 pm IST
பந்தை தன்வசப்படுத்தும் முயற்சியில் ஹைதி - ஸ்காட்லாந்து வீரர்கள். - படம்: ஏபி
பகிர்:

கால்பந்து உலகக் கோப்பை 2026ல் ஸ்காட்லாந்து அணியின் வரலாற்று வெற்றியில் நடுவரால் நிகழ்ந்த சர்ச்சை சமூக வலைதளத்தில் மிகப்பெரிய விமர்சனங்களைக் கிளப்பியுள்ளன.

குரூப் சி பிரிவில் ஹைதி - ஸ்காட்லாந்து அணிகள் மோதிய போட்டியில் ஸ்காட்லந்து அணி 1-0 என வென்றது. ஸ்காட்லாந்து அணி 1990க்குப் பிறகு தனது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. இருந்தும் இந்தப் போட்டியில் நடந்த ஹேண்ட்பால் சர்ச்சை அதனை விஞ்சியுள்ளது.

இந்தப் போட்டியின் 79ஆவது நிமிஷத்தில் ஹைதியின் மிட்ஃபீல்டர் ஜீன்-ரீகினேர் பெல்லேகார்டே அடித்த பந்தை ஸ்காட்லாந்தின் டிஃபெண்டர் கிராண்ட் ஹான்லி பெனால்டி பாக்ஸுக்குள் கைகளால் தடுத்திருப்பார்.

Advertisement

Advertisement

கால்பந்து விதியின்படி பெனால்டி பாக்ஸுக்குள் கைகளால் தடுத்தால் ஹேண்ட்பால் விதிமீறலுக்கு ஹைதி அணிக்கு பெனால்டி கொடுத்திருக்க வேண்டும். ஆனால், கள நடுவரும் விஏஆர் நடுவடும் பெனால்டி கொடுக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எக்ஸ் பக்கத்தில் கால்பந்து ரசிகர் ஒருவர், “என் வாழ்க்கையில் பார்த்த மிகப்பெரிய திருட்டு இதுதான். கைகள் எங்கிருக்கிறது எனப் பாருங்கள். ஹைதியிடம் இருந்து ஸ்காட்லாந்து திருடி வென்றுள்ளது” எனக் கூறியுள்ளார்.

இந்தப் போட்டியில் தோற்றாலும் கவனம் பெற்ற ஹைதி அடுத்த போட்டியில் பிரேசிலுடன் மோத, ஸ்காட்லாந்து மொராக்கோவுடன் மோதுகிறது.

ஹைதி அணியின் சீருடையில் அரசியல் தொடர்பான படங்கள் இருந்ததால் அதனை தடை செய்து வேறு சீருடையை மாற்றும்படி ஃபிஃபா அறிவுறுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

summary

Robbery in FIFA world cup 2026? Scotland vs Haiti marred by bad referee as fans outrage over social media

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.