முகப்பு
விருதுநகர்

சிவகாசியில் ஊரணி தூர்வாரும் பணி தொடக்கம்

சிவகாசியில் பொத்துமரத்து ஊரணி தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது என நகர் மன்ற த்தலைவர் வெ.க. கதிரவன்

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 11:51 am IST
பகிர்:

சிவகாசியில் பொத்துமரத்து ஊரணி தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது என நகர் மன்ற த்தலைவர் வெ.க. கதிரவன் தெரிவித்துள்ளார்.

  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சிவகாசி பஸ் நிலையம் எதிரில் உள்ள இந்த ஊரணி 4 ஏக்கர் 22 செண்ட் இடத்தில் அமைத்துள்ளது. நகராட்சி பகுதியில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் பொருட்டு, நகராட்சி பகுதியில் உள்ள 12 கிணறுகள் தூர்வாரப்பட்டு, அப்பகுதியில் வீடுகளில் மழைபெய்தால், கிணற்றுக்கு மழைநீர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

  மேலும் தன்னிறைவு திட்டத்தின் கீழ், நகராட்சி பகுதியில் உள்ள ஊரணி உள்ளிட்டவை தூர்வாரப்பட உள்ளது. இதில் முதல் கட்டமாக பொத்துமரத்து ஊரணி தூர்வாரப்படுகிறது.

Advertisement

Advertisement

   இந்த ஊரணியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இப்பணிக்கு ரூ. 33.50 லட்சம் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

   இதனை தன்னிறைவு திட்டத்தின்கீழ் செய்வதற்கு பொதுமக்கள் பங்களிப்புத் தொகையாக ரூ. 11.18 லட்சத்திற்கான காசோலை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிகரனிடம் நேரில் சென்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

   இதில் துணைத் தலைவர் கே.ஏ.ஏ. அசன்பத்ரூதீன், பொறியாளர் மா. முத்து மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.     

  இதையடுத்து பொத்துமரத்து ஊரணி தூர்வாரும் பணியும், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments