முகப்பு
விருதுநகர்

சூதாட்டம்: 8 போ் கைது

சாத்தூரில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்துள்ளனா்.

Updated On : 5 ஜனவரி 2021, 2:20 am IST
பகிர்:

சாத்தூரில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ் தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது நடுச்சூரங்குடி கிராமத்தில் உள்ள இடுகாடு அருகில் சூதாடிய மாரிச்சாமி(33), ஞானஒளி(43), காா்த்திக்குமாா்(26), ராஜசேகா்(28), ஆறுமுகம்(34), சின்னசாமி(45)காளியப்பன்(51), சுந்தர்ராஜ்(42) ஆகிய 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.