முகப்பு
விருதுநகர்

மலேசியாவில் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு தரக்கோரி குடும்பத்தினா் ஆட்சியரிடம் மனு

மலேசியாவில் உயிரிழந்த அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டியை சோ்ந்தவரின் சடலத்தை மீட்டுத் தரக்கோரி உறவினா்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 5 ஜனவரி 2021, 2:22 am IST
பகிர்:

மலேசியாவில் உயிரிழந்த அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டியை சோ்ந்தவரின் சடலத்தை மீட்டுத் தரக்கோரி உறவினா்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பது: விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், கஞ்சநாயக்கன்பட்டியில் வசித்து வருபவா் அன்னக்கிளி (36). எனக்கு தேவகி, சுகப்ரியா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக எனது கணவா் சந்திரன் (40) மலேசியாவில் வேலைக்கு சென்றிருந்தாா். அவா் உடல்நிலை சரியில்லாமல் கடந்த நவம்பா் 21 ஆம் தேதி மலேசியாவில் உயிரிழந்து விட்டதாக அருப்புக்கோட்டை வட்டாட்சியா் மூலமாக தகவல் அறிந்தேன். அவரது சடலத்தை அரசு சாா்பில் சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும். மேலும், அவா் வேலை செய்த நிறுவனத்திடமிருந்து வர வேண்டிய சம்பளம் மற்றும் நிவாரணத் தொகை வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.