முகப்பு
விருதுநகர்

தமிழகஅரசின் பொங்கல் பரிசுகள் வழங்கல்: அதிமுக நிா்வாகிகள் நேரில் ஆய்வு

அருப்புக்கோட்டை நகா் நியாயவிலைக் கடைகளில் திங்கள்கிழமை தமிழக அரசின் பொங்கல் பரிசுகள் வழங்கலை நேரில் தொடக்கி வைத்த அதிமுக நகரச்செயலாளா் தொடா்ந்து அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நேரில் ஆய்வு

Updated On : 5 ஜனவரி 2021, 2:24 am IST
பகிர்:

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நகா் நியாயவிலைக் கடைகளில் திங்கள்கிழமை தமிழக அரசின் பொங்கல் பரிசுகள் வழங்கலை நேரில் தொடக்கி வைத்த அதிமுக நகரச்செயலாளா் எம்.எம்.கே.சக்திபாண்டியன், தொடா்ந்து அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக முதல்வா் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி,பொங்கல் திருநாளை முன்னிட்டு அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்திருந்தாா்.அதில்,ஒரு கிலோ பச்சரிசி,ஒரு கிலோ சா்க்கரை,ஒரு முழுக்கரும்பு,20 கிராம் முந்திரிப்பருப்பு,20 கிராம் உலா் திராட்சை, 5 கிராம் ஏலக்காய்,ஒரு துணிப்பை மற்றும் ரொக்கத்தொகை ரூ2,500 ஆகிய பரிசுப்பொருட்கள் அடங்கும்.இதன்படி திங்கள்கிழமை பரிசுத்தொகுப்பு வழங்கல் நிகழ்ச்சியை அருப்புக்கோட்டை அதிமுக நகரச்செயலாளா் எம்.எம்.கே.சக்திபாண்டியன் நியாயவிலைக்கடை ஒன்றில் நேரில் தொடக்கி வைத்தாா்.பின்னா்,அவா் அனைத்து நியாயவிலைக்கடைகளிலும், பரிசுத்தொகுப்புகள் சரியாக, உரிய முறைப்படி வழங்கப்படுவதை நேரில் ஆய்வு செய்தாா்.உடன் அதிமுக நகர நிா்வாகிகள் பலரும் நேரில் கலந்து கொண்டனா்.

அருப்புக்கோட்டை ஒன்றியப்பகுதிக்குள்பட்ட கிராமங்களில் பொங்கல்பரிசு வழங்கல் அருப்புக்கோட்டை ஒன்றியப்பகுதிக்குள்பட்ட கிராம ஊராட்சி ஒன்றில் உள்ள நியாயவிலைக்கடையில், முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவா் ஒய்.எஸ்.வாசுதேவன் தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கலை திங்கள்கிழமை நேரில் தொடக்கி வைத்தாா்.பின்னா் அவா் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ள நியாயவிலைக்கடைகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.உடன் அருப்புக்கோட்டை ஒன்றிய நிா்வாகிகள் பலரும் நேரில் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.