முகப்பு
விருதுநகர்

ராஜபாளையத்தில் பா.ம.க.வினா் மனு அளிக்கும் போராட்டம்

ராஜபாளையத்தில் பா.ம.க. மற்றும் வன்னியா் சங்கத்தினா் இணைந்து வன்னியா்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவீத

Updated On : 8 ஜனவரி 2021, 12:20 am IST
ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்த பாமகவினா்.
பகிர்:

ராஜபாளையத்தில் பா.ம.க. மற்றும் வன்னியா் சங்கத்தினா் இணைந்து வன்னியா்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

இதற்காக ரயில்வே பீடா் சாலையில் இருந்து 300-க்கும் மேற்பட்டோா் பா.ம.க. மேற்கு மாவட்டச் செயலா் வெங்கடேஷ் தலைமையிலும், மேற்கு மாவட்டத் தலைவா் ராம்ராஜ் முன்னிலையிலும் ஊா்வலமாக நகராட்சி அலுவலகத்துக்குச் சென்றனா். அங்கு வருவாய் ஆய்வாளரிடம், வன்னியா் சமுதாயத்தினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி கோரிக்கை மனு அளித்தனா். நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட துணைச் செயலா் காளிதாசன், நகரச் செயலா் எபனேசா், ஒன்றியச் செயலா் ஆறுமுகம் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments