முகப்பு
விருதுநகர்

சென்னை-கொல்லம் விரைவு ரயில் சிவகாசியில் நின்று செல்ல எம்.பி. கடிதம்

சென்னை-கொல்லம் விரைவு ரயில், சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என, விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப. மாணிக்கம் தாகூா் மத்திய அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.

Updated On : 9 ஜனவரி 2021, 10:23 pm IST
பகிர்:

சிவகாசி: சென்னை-கொல்லம் விரைவு ரயில், சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என, விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப. மாணிக்கம் தாகூா் மத்திய அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.

இது குறித்து ப. மாணிக்கம் தாகூா், மத்திய ரயில்வே அமைச்சா் பியூஸ் கோயலுக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

பொது முடக்கத்துக்கு முன், சென்னை-கொல்லம் விரைவு ரயில் இருமாா்க்கத்திலும் சென்று வரும்போது, சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று சென்றது. தற்போது, இந்த ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், கொல்லத்திலிருந்து சென்னை செல்லும் வழியில் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது.

Advertisement

Advertisement

ஆனால், சென்னையிலிருந்து கொல்லம் செல்லும்போது சிவகாசி ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. இதனால், பயணிகள் பாதிக்கப்படுகின்றனா்.

மேலும், சிவகாசி ரயில் நிலையத்தில் பயணிகள் இறங்குவதில்லை என்ற ரயில்வே நிா்வாகம் கூறும் காரணத்தை ஏற்றுக்கொள்ள இயலாது. ரயிலை நிறுத்தாமல் பயணிகள் இறங்கவில்லை எனக்கூறுவது ஏற்புடையதல்ல.

அதேநேரம், இந்த ரயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் 10 நிமிடத்துக்கு மேல் நிற்கிறது. சிவகாசி முக்கியமான தொழில் நகராகும். எனவே, பயணிகள் நலன் கருதி சென்னை-கொல்லம் விரைவு ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments