முகப்பு
தமிழ்நாடு

குதிரை பேரத்தை முதன்முதலில் உருவாக்கியது திமுகதான்: செங்கோட்டையன்

திமுகதான் குதிரை பேரத்தை முதன்முதலில் உருவாக்கியதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியது பற்றி...

Updated On : 5 ஜூலை 2026, 10:12 am IST
செங்கோட்டையன் - கோப்புப் படம்
பகிர்:

திமுகதான் குதிரை பேரத்தை முதன்முதலில் உருவாக்கியதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தவெகவில் குதிரை பேரம் செய்யப்படுவதாக திமுக, அதிமுக, பாஜக தலைவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஈரோட்டில் தவெக மீதான குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துப் பேசியதாவது, குதிரை பேரத்தை உருவாக்கியதே திமுகதான். அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, மதிமுகவை சேர்ந்த ராமகிருஷ்ணனை ராஜிநாமா செய்யவைத்து, திமுகவில் இணைத்து, மீண்டும் அவர் திமுகவில் போட்டியிட வாய்ப்பளித்தனர். அனிதா ராதாகிருஷ்ணனும் அதிமுகவை சேர்ந்தவர்தான்.

Advertisement

Advertisement

குதிரை பேரத்தை முதன்முதலில் உருவாக்கிய நிலை திமுகவுக்குத்தான் இருக்கிறது. எங்களுக்கு குதிரை பேரம் பேசவேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில், நாங்கள் (தவெக) வலிமையாக ஆட்சியமைத்திருக்கிறோம்.

96 பேரை வைத்திருக்கும் மைனாரிட்டிக்குத்தான் (திமுக) குதிரை பேரம் தேவை; எங்களுக்குத் தேவையில்லை என்று தெரிவித்தார்.

summary

Horse-trading was first initiated by the DMK, says Minister KA Sengottaiyan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments