தவெகவில் அதிமுகவினர் இணைவது ஏன்? செங்கோட்டையன்
திமுகவுடன் இணைவதை பிடிக்காததால்தான் அதிமுகவினர் சிலர் தவெகவில் இணைவதாக செங்கோட்டையன் கூறியது பற்றி...
திமுகவுடன் இணைவதை பிடிக்காததால்தான் அதிமுகவினர் சிலர் தவெகவில் இணைவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தவெக குதிரைபேரத்தில் ஈடுபட்டதாக அதிமுக புகார் அளித்தது தொடர்பாக செங்கோட்டையன் பேசியதாவது, குதிரை பேரம் என்று ஒன்றும் கிடையாது. அவர் (எடப்பாடி பழனிசாமி) செய்யாத காரியம் என்று ஒன்றுமில்லை.
47 பேரை மட்டும் வைத்துக்கொண்டு முதல்வராகலாம் என்று அவர் சொன்னாரா? இல்லையா?
Advertisement
Advertisement
நாங்கள் எதுவும் சொல்லவில்லை. இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரே தெளிவாகச் சொல்கிறார். இதுவரையில் அவருக்கு எந்த பதிலும் சொல்லப்படவில்லை.இவை அனைத்தும் பொய் என்று அவர் (இபிஎஸ்) சொல்கிறார்.
ஆனால், அங்கிருந்து வெளிவந்த அனைவருமே சொல்கின்றனரே. இதனால்தான் நாங்கள் வெளிவருவதாகவும், தங்களுக்கு இது பிடிக்கவில்லை என்றும்தான் வெளிவந்த அனைவரும் கூறுகின்றனர்.
தெற்கும் வடக்கும் ஒன்றாக இணையப் போவதில்லை. அதுபோல நாம் (அதிமுக - திமுக) ஒன்றாக இணைப்பது என்பது என்றுமே வரலாற்றில் இல்லை என்றுகூறி, தெளிவுபடுத்திவிட்டுத்தான் அங்கிருந்து இங்கு வந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
AIADMK members who are unwilling to join the DMK are joining the TVK, says Minister KA Sengottaiyan.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.