அதிமுகவிலிருந்து மேலும் 10 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வரவுள்ளனர்! செங்கோட்டையன் பேச்சு
கோபிச்செட்டிப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது பற்றி...
அதிமுகவில் இருந்து மேலும் 10 எம்எல்ஏக்கள் தவெகவிற்கு வர உள்ளதக கோபிச்செட்டிப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் தவெக ஆட்சியின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
"இந்த கட்சிக்கு தன்னை அர்ப்பணித்து வந்த அனைவருக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும். அனைவரும் வாழ வேண்டும். அதில் எந்த பாகுபாடும் இருக்காது. தவெக தலைவர் அதைத்தான் எங்களுக்கு சொல்லியிருக்கிறார். இங்கு பல பேர் எங்களை நம்பி வந்திருக்கிறீர்கள், அதனால் எதற்கும் கவலைப்பட வேண்டாம்.
Advertisement
Advertisement
அதிமுகவில் 6 எம்எல்ஏக்கள் குறைந்துவிட்டன. இப்போது 47 எம்எல்ஏக்கள்தான் உள்ளனர். அதில் இன்னும் 10 பேர் தவெகவுக்கு வரத் தயாராக இருக்கின்றனர். அந்த 10 பேரும் தவெகவுக்கு வந்தால் முடிந்துவிட்டது. 25 பேர் மொத்தமாக வரத் தயாராகிவிட்டார்கள்.
இந்திய வரலாற்றில் தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்வர் விஜய்யைப் போல தொலைநோக்குச் சிந்தனை யாருக்கும் கிடையாது.
சேப்பாக்கத்தில் இஸ்லாமிய மக்கள் கொஞ்சம் மனம் மாறிவிட்டார்கள். இல்லையென்றால் சேப்பாக்கம் தொகுதி முடிந்திருக்கும். எதிர்க்கட்சி வரிசையில் முன்னாள் முதல்வர், துணை முதல்வர் யாரும் இருக்கமாட்டார்கள்" என்று பேசினார்.
10 more MLAs from AIADMK are set to join TVK: Sengottaiyan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.