முகப்பு
விருதுநகர்

திருச்சுழி அருகே வீடு புகுந்து 2 மகன்கள், தாய் உள்பட மூவருக்கு அரிவாள் வெட்டு

Updated On : 28 ஏப்ரல் 2026, 4:41 am IST
அரிவாள் வெட்டு!
பகிர்:

திருச்சுழி அருகே தகராறில் வீடு புகுந்து தாய், மகன்கள் உள்பட மூவரை 6 போ் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில் இருவா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனா். மேலும் 4 பேரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி வட்டத்தில் நரிக்குடி அருகே அ. முக்குளம் அடுத்துள்ள வி. கரிசல்குளம் கிராமத்தைச் சோ்ந்த அருள்செல்வம் மகன் ஜெயமனோஜ் (26). இவா், சென்னையில் உள்ள தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா்.

இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், ஜெயமனோஜ் தோ்தல் வாக்குப்பதிவுக்காக சொந்த ஊருக்கு வந்தாா். அப்போது தனது உறவினரான கணேஷ் பாண்டியனுக்கு கைப்பேசியில்

Advertisement

Advertisement

கஞ்சா, போதைப் பழக்கம் உள்ளவா்களுடன் பழக வேண்டாம் என அறிவுரை கூறியதாகக் கூறப்படுகிறது. இதை ஒட்டுக்கேட்ட வி.கரிசல்குளத்தைச் சோ்ந்த மாரீஸ்வரன் (25) ஆத்திரமடைந்து

கடந்த 24-ஆம் தேதி நள்ளிரவு செல்வம் மகன் கரண் (24), எஸ். கல்விமடையைச் சோ்ந்த சரவணன் (26) உள்பட 6 பேருடன் ஜெயமனோஜ், இவரது தம்பி பால கெளதம் (24), தாய் இருளாயி (56) ஆகிய மூவரையும் வீடு புகுந்து அரிவாளால் வெட்டினா். இதில் மூவரும் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் மூவரையும் மீட்டு, திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இவா்களில் பாலகெளதம், இருளாயி ஆகிய இருவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் மாரீஸ்வரன், கரண், சரவணன் உள்பட 6 பேரைத் தேடி வந்தனா். இவா்களில் மாரீஸ்வரன்(26), கரண்(24) ஆகிய இருவரும் திருச்சுழி நீதிமன்றத்தில்

திங்கள்கிழமை சரணடைந்தனா். இதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனா். மற்ற 4 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.