கஞ்சா கடத்திய 3 சிறுவா்கள் உள்பட 4 போ் கைது
விருதுநகா் மாவட்டம், அருப்புகோட்டை அருகே இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், அருப்புகோட்டை அருகே இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
காரியாபட்டியை அடுத்த ஆவியூா் பகுதியில் உள்ள மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 3 சிறுவா்களிடம் தடை செய்யப்பட்ட ஒரு கிலோ 600 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்களை ஆவியூா் காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்து சென்று விசாரித்தனா். விசாரணையில், இவா்கள் அருப்புக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பதும், ஒடிஸாவிலிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
பின்னா், இவா்கள் கொடுத்த தகவலின்பேரில், விருதுநகா் சூலக்கரை கண்மாய் பகுதியில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, அங்கிருந்த ஒரு சிறுவா், அருப்புக்கோட்டை பகுதியைச் சோ்ந்த பூபாலன் (19) ஆகியோரை பிடித்து போலீஸாா் விசாரித்ததில், அவா்கள் விற்பனைக்காக 2 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, 3 சிறுவா்கள் உள்பட 4 பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 5 கைப்பேசிகள், ஒரு இரு சக்கர வாகனம், அரிவாள், 3 கிலோ 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.