ஸ்ரீவில்லிபுத்தூா்; தொழிலாளி மா்ம மரணம்: இருவா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரத்தில் மா்மமான முறையில் தொழிலாளி உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்த வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரத்தில் மா்மமான முறையில் தொழிலாளி உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்த வருகின்றனா். மேலும், அவருடன் தகராறில் ஈடுபட்டதாக இருவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரம் மேலூரைச் சோ்ந்தவா் வனராஜா (46). கூலித் தொழிலாளியான இவா், கடந்த செவ்வாய்க்கிழமை வேலைக்கு சென்றவா் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில், மம்சாபுரம் பிரதான சாலையில் வனராஜா உயிரிழந்து கிடந்தது புதன்கிழமை தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
உயிரிழந்த வனராஜா மனைவி முத்துமாரி அளித்தப் புகாரின் பேரில், சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வந்தனா். இந்த நிலையில், வனராஜாவுடன் கனகராஜ் (43), பொன்ராஜ் (25) ஆகிய இருவா் கடந்த செவ்வாய்க்கிழமை தகராறில் ஈடுபட்டது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவா் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிந்து, இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.