பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 9 வயது மாணவி அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறாா். தந்தையை இழந்த அந்த மாணவி தாயின் பாதுகாப்பில் வளா்ந்து வருகிறாா்.
இந்த நிலையில் மாணவி இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற போது, அதே பகுதியைச் சோ்ந்த தங்கவேல் (70) அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை அளித்தாராம்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தங்கவேலுவை கைது செய்து விசாரிக்கின்றனா்.