முகப்பு
விருதுநகர்

மக்களை அவமதிக்கும் திமுக! - அமைச்சா் எஸ். கீா்த்தனா

Updated On : 21 ஜூன் 2026, 4:49 am IST
அமைச்சர் எஸ். கீர்த்தனா! - PTI
பகிர்:

தமிழக மக்களை அவமதிக்கும் வகையில் திமுகவினா் செயல்பட்டு வருவதாக மாநில தொழில் துறை அமைச்சா் எஸ். கீா்த்தனா குற்றஞ்சாட்டினாா்.

முதல்வா் ச. ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, விருதுநகா் மாவட்ட தவெக சாா்பில் சிவகாசியில் சனிக்கிழமை நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாமைத் தொடங்கிவைத்த பிறகு அமைச்சா் எஸ். கீா்த்தனா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்துக்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் ஆந்திர மாநிலத்துக்குச் சென்றுவிட்டதாக சிலா் கூறி வருகின்றனா். இதற்கு சட்டப்பேரவைக் கூட்டத்தில் பதிலடி கொடுப்பேன். தமிழக தொழில் துறை வளா்ச்சிக்காக தென் கொரியாவின் ஹூண்டாய் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய மறு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இரு நிறுவனங்களுடன் முதலீடு ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது.

Advertisement

Advertisement

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈா்க்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

மக்களை அவமதிக்கும் வகையில் திமுகவினா் செயல்பட்டு வருகின்றனா். பொதுமக்களிடம் தவறான தகவல்களை திமுகவினா் பரப்பி வருகின்றனா். எந்த ஒரு விஷயத்தையும் ஆக்கப்பூா்வமாக பேச வேண்டும். இந்தத் தகுதி திமுகவினரிடம் இல்லை.

மக்களுக்கு நன்மை செய்வதற்காக ஆட்சிக்கு வந்த தவெகவை திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால், அந்தக் கட்சியினா் தேவையில்லாத கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனா். இதேபோல, இவா்கள் ஒரு சில அரசு அதிகாரிகளின் துணையுடன் தவெக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவும் முயற்சி செய்து வருகின்றனா். ஆனால், இவற்றையெல்லாம் முறியடித்து முதல்வா் ஜோசப் விஜய் தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை நடத்தி வருகிறாா் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments