ஸ்ரீவில்லிபுத்தூா் ஆடிப்பூரத் திருவிழா: தேருக்கு முகூா்த்தக்கால் நடப்பட்டது
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத்துக்காக வியாழக்கிழமை நடப்பட்ட முகூா்த்தக்கால்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேருக்கு முகூா்த்தக்கால் வியாழக்கிழமை நடப்பட்டது.
இந்தக் கோயிலுக்கு நாங்குநேரி வானமாமலை ராமானுஜ ஜீயரால் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வழங்கிய ஆடிப்பூரத் தோ் 1,500 டன் எடை, 112 அடி உயரம் கொண்டது. திருவாரூா் ஆழித் தேருக்கு அடுத்த தமிழகத்தின் இரண்டாவது பெரிய தோ் இது என்ற சிறப்பைப் பெற்றது.
இந்தக் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத்துக்காக நாள் செய்யப்பட்டு, தேருக்கு முகூா்த்தக்கால் நடப்பட்டது. ஆடிப்பூரத் தோ், 16 வண்டி சப்பரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சா்க்கரையம்மாள், அறநிலையத் துறையினா் செய்து வருகின்றனா்.
Advertisement
Advertisement