சிரி சிரி
சிரிப்பு சலனங்கள்: நகைச்சுவை நிறைந்த நாட்கள்
'என்னங்க.. மின்விசிறியில் ரெண்டு ரெக்கைதான் இருக்கு..?'
'தள்ளுபடி விலையில் வாங்கினேன். அதான் ஒரு ரெக்கை காணோம்போல..?'
-தீபிகா சாரதி, சென்னை.
Advertisement
Advertisement
'என்னங்க. இட்லி ரெண்டு முழம் வேணும்னு கேக்கறீங்களே..?'
'ஆமாம். நீதானே சொல்லுவே.. மல்லிகைப்பூப் போல இட்லி ஊத்தறேன்னு..'
-அ.யாழினிபர்வதம், சென்னை-78.
'மாப்ளே..புயல் வரப்போகுன்னு சொன்னியே..எப்போ.'
'ஆமாம். மாமா.. உங்க பொண்ணு ஆபிஸ் முடிச்சிட்டு கொஞ்ச நேரத்துல வருவா. அதான்..'
-அ.செந்தில்குமார், சூலூர்.
'அப்பா.. நான் டி.வி. சீரியலில் நடிக்கிறேன் ஆசிர்வாதம் பண்ணுப்பா..'
'மெகாராசாவா இரு!'
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74.
'இறந்துபோன எங்க அம்மா.. தினமும் உன் கனவில் வர்றாங்களா? என்னடி சொல்றே..'
'ஆமாங்க. தினமும் சீரியல் பார்த்து அவங்களுக்கு அந்தந்த கதையைச் சொல்லணுமாம்...'
-ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு.
'என்னங்க.. நம்ம புது வீட்டை ஆபிஸூக்கு வாடகை விடாதீங்கன்னு சொன்னேன்.. கேட்டீங்களா..?'
'எப்ப போயி வாடகை கேட்டாலும், எல்லோரும் தூங்கறாங்க.. அப்புறம் வாங்கன்னு சொல்றாங்க..?'
-அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
'நம்ம வீட்டு முன்னாடி கார் நிற்குதே.. யோகம்தானே நமக்கு..'
'நம்ம காரு எப்போ வாங்குனோம்..'
'எதிர்வீட்டுக்காரன் கார் நிற்குதே அதை சொன்னேன்..'
'என்னங்க நம்ம பையன் வீட்டோட மாப்பிள்ளையாவே இருக்கானே.. அசிங்கமா இல்லை..'
'விடுடி.. அவன் அங்கே அவுட்ஹவுஸ் மாப்பிள்ளையா தன்மானத்தோடதானே இருக்கான்...'
-பர்வதவர்த்தினி, பம்மல்.
'என் கனவில் ஜாக்சன் வந்ததும் நான் ஆடிப்போயிட்டேன்...'
'என்னங்க.. மைக்கேல் ஜாக்சனா...'
'இல்லைடி.. எமி ஜாக்சன்...'
'மூத்த பொண்ணு செல்வியை கட்டிக் கொடுத்திட்டோம். ரெண்டாவது பொண்ணு ஸ்ரீமதிக்குதான் வரன் அமைய தாமதமாகுது..'
'என்னங்க பண்றது.. வேதனையா இருக்கே'
'செல்வியோ ஸ்ரீமதி ஆகிட்டா.. ஆனா ஸ்ரீமதிதான் செல்வியாகவே இருக்கா..'
-வி.ரேவதி, தஞ்சாவூர்.