கனவில் வந்த சாமி... ஊரையே கருப்புக்கு அழைத்துச் சென்ற பக்தர்!
கருப்பு திரைப்படம் குறித்து...
ரசிகர் ஒருவர் கனவில் சாமி வந்ததால் ஊரையே கருப்பு திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கருப்பு கடந்த சில நாள்களாக தமிழக திரையரங்குகளில் சாமியாடிக்கொண்டிருக்கிறது என்றாலும் மிகையாகாது. விடுமுறை நாள்களுக்கு வந்த கூட்டம் வேலை நாள்களிலும் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் கருப்பு ரூ. 300 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான இப்படம் மலையாளம், தெலுங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் இந்தாண்டின் அதிகம் வசூலித்த படங்களில் இடம்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஆச்சரியப்படும் வகையில் திருச்செந்தூரைச் சேர்ந்த நபர் ஒருவர் தன் ஊரையே கூட்டி கருப்பு திரைப்படத்தைக் காண வைத்துள்ளார்.
இதுகுறித்து பேசியவர், “இதே திரையரங்கில் ஊர் மக்கள் அனைவரும் கருப்பு திரைப்படம் பார்ப்பது போல் எனக்கு கனவு வந்தது. அதனை உண்மையாக்க, என் உறவினர்கள், குடும்பத்தினர் உள்பட 217 பேரை திரையரங்கத்திற்கு அழைத்து வந்து இப்படத்தைக் காண வைத்தேன். கருப்புசாமி கடவுள் பாதுகாப்பை வழங்கக்கூடியவர். இந்த கலிகாலத்திலும் இப்படியான படத்தை ஆர்ஜே பாலாஜி எடுத்தது கடவுள் அருள் என்றே நினைக்கிறேன். அனைவரும் இப்படத்தைப் பார்க்க ஆசைப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் அபூர்வமாக நிகழும்படி மொத்த திரையரங்கையும் கருப்புசாமி பக்தர் தன் சொந்த செலவில் முன்பதிவு செய்து ஊர் மக்களைப் பார்க்க வைத்த செய்தியை ஆர்ஜே பாலாஜி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
A fan took his entire village to watch the movie Karuppu because God appeared in his dream.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.