முன்பே - டொவினோ தாமஸின் புதிய திரைப்படம்!
டொவினோ தாமஸ் நடிக்கும் புதிய திரைப்படம்...
நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு முன்பே எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தென்னிந்தியளவில் பிரபலமாக இருப்பவர் நடிகர் டொவினோ தாமஸ். பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர், இறுதியாக பள்ளிச்சட்டம்பி படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று எதிர்பார்ப்பை வெற்றியைப் பெறவில்லை. ஏஆர்எம் திரைப்படம் மூலம் ரூ. 100 கோடி வசூலித்த மலையாள நடிகர்களில் ஒருவர் என்கிற சாதனையையும் வைத்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சைஜூ ஸ்ரீதரன் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘முன்பே’ எனப் பெயரிட்டுள்ளனர். பனோரமா ஸ்டூடியோஸ் உடன் இணைந்து டொவினோவும் இப்படத்தைத் தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பும் துவங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
The new film starring actor Tovino Thomas has been titled 'Munpe'.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.