FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மலையாள சினிமாவுக்கு ஒரு சிறிய காதல் கடிதம்! - நடிகர் சூர்யா நெகிழ்ச்சி பதிவு!

நடிகர் டொவினோ தாமஸ் ‘சீன்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்ததற்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்...

சூர்யா
பகிர்:

மலையாள நடிகர் டொவினோ தாமஸ் ‘சீன்’ திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்ததற்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து வெளியான புதிய படம் “சீன்”. சூர்யாவின் ழகரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

நடிகர்கள் நஸ்ரியா, நஸ்லன், லால், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்தப் படத்தில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் “விக்டர்” எனும் கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் டொவினோ தாமஸ் மற்றும் மலையாள திரையுலகினருக்கு நன்றி தெரிவித்து இன்று (நவ. 14) நடிகர் சூர்யா தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“அன்புள்ள டொவினோ, எங்களின் விக்டராக இருந்ததற்கு உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை. நீங்கள் மிகுந்த அன்போடும், தாராள மனதோடும் இந்தப் படத்தில் இணைந்துகொண்டது எனக்கு வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு நெகிழ்ச்சியை அளிக்கிறது.

மேலும், சீன் படத்தில் எங்களுடன் இணைந்த மலையாள திரையுலகைச் சேர்ந்த துணை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகள் அனைவருக்கும் என் நன்றிகள். இது மலையாள சினிமாவுக்கு எங்களின் சிறிய காதல் கடிதம்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த நவ.6 ஆம் தேதி வெளியான “சீன்” திரைப்படம் ரூ. 205 கோடிக்கும் அதிகமாக வசூலைக் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Actor Suriya has expressed his gratitude to Malayalam actor Tovino Thomas for making a special appearance in the film ‘Scene’.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.