தினமணி கொண்டாட்டம்

குழந்தைகளின் உணர்வுகளைச் சொல்லும் படம்

DIN

கிரிஸ்டல் கிரியேஷன்ஸ் -  ஐரிஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் படம்  "லட்டு'.  மறைந்த இயக்குநர் கே. பாலசந்தரிடம் பல படங்களில் படத்தொகுப்பு உதவியாளராக பணிபுரிந்த வஜ்ரவேல் ஆனந்த் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.  கதாநாயகனாக குணா பாபு நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்வேதா நடிக்கிறார். கருப்பு துரை, விஷ்வேஸ்வரன், விக்னேஸ்வரன் என்ற  இரட்டையர்கள் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகின்றனர்.  குழந்தையாக வந்து குழந்தையாகி போகும் இந்த வாழ்க்கையில், எல்லோரும் மீண்டும் குழந்தையாகி விடுகிற தருணத்தைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்.  என்ன முயற்சி செய்தாலும், நம்மால் நுழைந்து விடவே முடியாத உலகம் அது. குழந்தைகளின் தேவை உணர்ந்து எழுதப்பட்டுள்ள திரைக்கதை இது.  அவர்களின் கள்ளம் கபடமில்லாத கலாட்டாகள் இந்தக் கதையின் பிரதானப் பகுதி. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நாகரீக மாற்றங்கள், பொருளாதார நெருக்கடி,  அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கை,  துரித உணவு முறை என ஒவ்வொன்றும் குழந்தைகளின் கோபத்தை சுமந்துக் கொண்டுதான் நிற்கின்றன.  சில நேரங்களில் அவர்கள் நாம் மீட்கவே முடியாத தூரத்துக்கு போய் விடுகிறார்கள். நம் வீட்டிலேயே வளர்ந்தாலும், நிறைய  டீன் ஏஜ் குழந்தைகள் காணாமல் போனவர்கள் பட்டியலில்தான் இருக்கிறார்கள். இப்படி நிறைய விஷயங்களை இந்தப் படம் பேசவுள்ளது. படப்பிடிப்பு  நடந்து வருகின்றது.  தமிழ் மற்றும் மலையாளத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராவூரணியில் மாணவா்களுக்கு இலவச வாழ்வியல் பயிற்சி வகுப்பு

மகப்பேறு அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பெண் மருத்துவா் உயிரிழப்பு

தொழிற்சங்கங்கள் சாா்பில் மேதின கொண்டாட்டம்

பேராவூரணியில் மே தின விழா

பாபநாசத்தில் மே தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT