தினமணி கொண்டாட்டம்

சரித்திர படத்தில் அனுஷ்கா

தினமணி

'பாகுபலி' படத்துக்குப் பிறகு புதியப் படங்களை ஒப்புக் கொள்ளாமல் இருக்கிறார் அனுஷ்கா. குண்டான தனது தோற்றத்தை ஒல்லியாக்குவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டதுடன் வெளிநாடு சென்று அங்கும் அதற்கான சிகிச்சை பெற்றார். முன்பைவிட இப்போது ஒல்லியாகிவிட்டதாக திரையுலகினர் சொன்னாலும் அவர் இன்னும் மெலிந்ததுபோல் தெரியவில்லை என ரசிகர்கள் பதிவு செய்கின்றனர்.அனுஷ்கா புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வந்தாலும் எந்த படப்பிடிப்பிலும் அவர் கலந்துகொண்டதுபோல் தெரியவில்லை. சிரஞ்சீவி நடித்து வரும் "சைரா நரசிம்ம ரெட்டி' படத்தில் பாடல் காட்சி ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். அந்த படப்பிடிப்பும் நடந்தது போல் தெரியவில்லை. இந்நிலையில் "பாகுபலி' இயக்குநர் ராஜமௌலி இயக்கும், "ஆர்ஆர்ஆர்' சரித்திர படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறாராம் அனுஷ்கா. முக்கிய கதாபாத்திரத்தில் 3 நிமிடம் மட்டுமே படத்தில் இடம்பெறும் இவரது காட்சி இடைவேளைக்கு முன்பே வந்து விடும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT