தினமணி கொண்டாட்டம்

அனிதா எம்பிபிஎஸ்

DIN

சமீபமாக செயல்படுத்தப்பட்டு இருக்கும் நீட் தேர்வு முறையால் மருத்துவத்துறையில் சாதிக்க வேண்டும் என நினைத்த பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் நிகழ்ந்த மாணவி அனிதாவின் தற்கொலை பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. இதைக் கருவாகக் கொண்டு "டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ்' என்ற பெயரில் படம் எடுக்கப்பட இருந்தது.  இந்தத் தலைப்பை தயாரிப்பாளர் ராஜகணபதி தயாரிப்பாளர் சங்கங்களில் முறைப்படி  பதிவு செய்து இன்று வரை தன்னுடைய பேனரில் வைத்துள்ளார்.

இதில் அனிதா குடும்பத்துக்கு முழுக் கதையும் சொல்லப்படாத காரணத்தால், படத்தை இயக்க இருந்த அஜெய்க்கும் தயாரிப்பாளருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தயாரிப்பாளர் தானே இந்தப் படத்தை இயக்குகிறார். படம் குறித்து பேசும் போது...  ""எனக்குச் சொந்தமான இந்த "டாக்டர். அனிதா எம்.பி.பி.எஸ்' எனும் தலைப்பை அவரோ அல்லது வேறு எவரும் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் இந்தத் தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் எமது தயாரிப்பு நிறுவனமான "மாங்காடு அம்மன் மூவிஸ்'  சார்பில் முறைப்படி பதிவு செய்துள்ளோம்'' என்றார் ராஜகணபதி.  அனிதாவின் தந்தையாக வி.ராஜகணபதி நடிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT