தினமணி கொண்டாட்டம்

சிறுவனாக உணர்ந்தேன்: நடிகர் கார்த்தி

DIN


கரோனா பரவல் அச்சங்களுக்கு இடையே வெற்றி முகம் கண்டுள்ளது "சுல்தான்'. அரங்குங்கள் நிறைந்த காட்சிகளாக பல திரையரங்களில் விழா கோலம் பூண்டுள்ளது இந்தப் படம். இந்தப் படத்தின் வெற்றி குறித்து நடிகர் கார்த்தி பேசும் போது.... ""படம் பெரும் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.  இப்படத்தின் கதையை கேட்கும்போது நான் 10 வயது சிறுவனாக உணர்ந்தேன். நான் என்ன சொன்னாலும் கேட்பதற்கு 8 அடியில் ஒரு கதாபாத்திரம். அதேபோல், குள்ளமாக ஒரு பாதுகாவலர். இதுபோக, 100 அடியாள்கள். என்னை பாதுகாப்பது தான் அவர்களின் வேலை. எப்போதும் என்னைச் சுற்றியே இருப்பார்கள் என்று கேட்கும்போது கற்பனைக் கதை போல தோன்றியது. அனைவரும் அதை விரும்புவோம்.

இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனின் முதல் வேண்டுகோள். இந்தப் படத்தில்  லால் நடிக்க வேண்டும் என்பதுதான்.

அவர் கூறியதைப் போல லால் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். மயில்சாமியின் நகைச்சுவையை நான் மிமிக்ரி செய்ய முயற்சி செய்யும் அளவிற்கு அளப்பரியதாக இருக்கும். அதேபோல, யாருக்கு என்ன தேவையோ அதை கடன் வாங்கியாவது செய்யக் கூடியவர் மயில்சாமி. பாடல்களிலும் கதையைக் கூறி யாரையும் எழுந்து போக விடாமல் இசையமைத்த இசையமைப்பாளர்களுக்கு நன்றி. இப்படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களும் ஒரு ஓவியம். அதை வடிவமைத்த பெருமை இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனையே சேரும்''என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

‘வைட்டமின் சி’ ஐஸ்வர்யா கண்ணன்...!

6 மாதங்களில் 100 திரையரங்குகள் மூடல்!

ஜார்க்கண்ட் அமைச்சருக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்!

3 மாவட்டங்களில் அதி கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

SCROLL FOR NEXT