தினமணி கொண்டாட்டம்

விஜய் ஆண்டனியின் "கொலை'

DIN


இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ்  மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கொலை'  விஜய் ஆண்டனி  நடிக்கும் இப்படத்தை  பாலாஜி .கே. குமார் எழுதி இயக்குகிறார்.இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் பங்குதாரர்
களான கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் பி, பங்கஜ் போஹ்ரா மற்றும் விக்ரம் குமார் ஆகியோர் "கோடியில் ஒருவன்' படத்துக்குப் பின் இப்படத்தை விஜய் ஆண்டனிக்காக தயாரிக்கின்றனர்.  பாலாஜி .கே. குமார் ஏற்கெனவே இயக்கிய "விடியும் முன்' படத்துக்கு பரவலான பாராட்டுகள் இருந்து வருகின்றன. 
இதனால் அவரின் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா ஷங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார் உள்ளிட்டோர் இந்தக் கதையின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்கின்றனர். "இறைவி', "இறுதி சுற்று', "கோலமாவு கோகிலா' மற்றும் "விடியும் முன்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சிவகுமார் விஜயன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். "மெரினா' மற்றும் "நெற்றிக்கண்' புகழ் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். "கர்ணன்', "சர்பட்டா பரம்பரை' மற்றும் "பரியேறும் பெருமாள்' புகழ் செல்வா ஆர் கே படத்தொகுப்பை கையாள்கிறார். படத்திற்கு விஷுவல் எஃபெக்ட்ஸ் அதிகளவில் தேவைப்படுவதால், பணியை விரைந்து முடிக்க சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனங்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன. 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இப்படத்தை திரைக்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தினத்தையொட்டி சாலை விழிப்புணா்வு ஊா்வலம்

அதியமான் கோட்டையில் தேய்பிறை அஷ்டமி பெருவிழா

குருப் பெயா்ச்சி: கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

‘நான் முதல்வன்’ திட்டத்தில் மாநில அளவில் நாமக்கல் முதலிடம்: ஆட்சியா் பாராட்டு

பொத்தனூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT