தினமணி கொண்டாட்டம்

பழைய நட்பு மாறக்கூடாது

DIN

அப்துல்கலாம் ஐயா,  ஜனாதிபதி பதவியேற்ற உடனேயே என்னை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்தார். அவர் எதிரிலே நான் அமர்ந்தேன். அப்பொழுது அவர் சொன்னது சார், "உங்களது தேச சேவை மகத்தானது. நாடே உங்களுக்கு கடமைப்பட்டுள்ளது'  என்று அவர் அன்போடு ஆரம்பித்த போது பேச்சில் நான் குறுக்கிட்டேன்.

"ஐயா, நீங்கள் நாட்டின் மிக உயர்ந்த ஜனாதிபதி. அதோடு என்னை விட வயதில் பெரியவர். தயவு செய்து இனி மேலாவது என்னை சார் என்று அழைக்காதீர்கள். நான் நாட்டிற்கு என் கடமையைத் தான் செய்தேன்'  என்று சொன்னேன்.

அதற்கு அவர் " நண்பர்கள் எப்போதும் நண்பர்கள் தான். உயர்ந்த பதவிக்கு வந்தால் பழைய நட்பு மாறக்கூடாது. ராஜிவ் காந்தி வழக்கில் கொலை விசாரணையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாது என்று எல்லோரும் கருதிய போதும், நீங்கள் உயிரை பணயம் வைத்து இரவு-பகலாக பாடுபட்டு எங்கோ இருந்து வந்த அந்த பயங்கரவாத இயக்கத்தை பற்றியும், குற்றவாளிகளை பற்றியும் தடயம் சேகரித்தீர்கள். 

எந்த அரசியல் குறுக்கீட்டிற்கோ, அச்சுறுத்தலுக்கோ சிறிதும் அஞ்சாமல், குற்றவாளிகளை அடையாளம் கண்டு, தடயம் சேகரித்து, சாட்சிகளை கண்டுபிடித்து, இரண்டு உச்ச மட்ட நீதி விசாரணைகளையும் சந்தித்து, உச்சநீதிமன்றமும், உலகமுமே பாராட்டும்படி வழக்கில் வெற்றி கண்டீர்கள். அதனால் உங்கள் உயிருக்கும் ஆபத்து நேர்ந்ததோடு, உங்கள் மனைவி கலாவும் இருதய நோயால் பாதிக்கப்பட்டார். நீங்கள் இந்த வழக்கை வெற்றிகரமாக நடத்தியதால், நாட்டின் கெளரவம் நாட்டின் பாதுகாப்பு பலப்பட்டது. இந்திய நாடே உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது. நான் இப்போது இந்த நாட்டின் குடியரசுத் தலைவர், உங்களுக்கு எந்த பதவி வேண்டும். ஆளுநர்,  வெளிநாட்டு தூதர் எந்த பதவி வேண்டுமானாலும் கேளுங்கள். நான் அதை உங்களுக்கு அளித்து மகிழ்வேன் அது என் கடமை'  என்று உறுதியாக பாசத்தோடு சொன்னதைக் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்ததோடு நான் மிக உணர்ச்சிவசப்பட்டேன். 

-டி.ஆர். கார்த்திகேயன்  எழுதிய
"உலக உத்தமர் கலாம்'  நூலிலிருந்து...
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT