முகப்பு
இளைஞர்மணி

சுருங்கி விரியும் ட்ரோன்!

ஆளில்லாத சிறிய விமானங்கள் என்று அழைக்கப்படும் "ட்ரோன்'கள் இன்றைய நவீன கால உலகத்துக்கு அத்தியாவசிய தேவையாகிவிட்டது. பொழுதுபோக்குக்காக மட்டுமன்றி,

Updated On : 25 டிசம்பர் 2018, 10:12 am IST
பகிர்:

ஆளில்லாத சிறிய விமானங்கள் என்று அழைக்கப்படும் "ட்ரோன்'கள் இன்றைய நவீன கால உலகத்துக்கு அத்தியாவசிய தேவையாகிவிட்டது. பொழுதுபோக்குக்காக மட்டுமன்றி, பேரிடர் காலங்களிலும் இந்த ட்ரோன்களின் சேவை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
ஆபத்து காலங்களில் மனிதர்கள் நுழைய முடியாத இடங்களிலும், இந்த ட்ரோன்கள் எந்தவித தயக்கமுமின்றிச் சென்று களநிலவரத்தைக் கண்டறிவது மீட்பு பணிகளுக்கு பெரும் உதவியாக அமைகிறது.
அதிக எடையை தாங்கிச் செல்வது, வேகமாகச் செல்வது ஆகியவற்றின் அடிப்படையில்தான் ட்ரோன்களின் நவீனமயம் கணக்கிடப்பட்டு வந்தது. இதில் அடுத்தகட்டமாக, சுருங்கி விரியும் ட்ரோன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த சுருங்கி விரியும் ட்ரோன்களின் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். பறவைகள் பறக்கும்போதே தனது உடல் அமைப்பை குறுகிய பாதைகளுக்கு ஏற்ப மாற்றி அமைத்து செல்வதைப் பார்த்து இந்த வகையிலான ட்ரோன்களை உருவாக்க திட்டமிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 
இதற்கு "மார்பிங்' ட்ரோன்கள் என்று பெயரிட்டுள்ளன. வழக்கமாக ட்ரோன்கள் "x' வடிவில்தான் இருக்கும். இதை "T', "H', "O' போன்ற வடிவில் பறக்கும்போதே மாற்றிக் கொள்ளலாம். இதற்காக ட்ரோன்களின் நான்கு இறக்கைகளும் மடிந்து விரியும் வகையில் சிறிய மோட்டார்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் ட்ரோன் பறப்பதற்கும் இடையூறு ஏற்படாத வகையில் இது துல்லியமாக அமைக்கப்பட்டுள்ளது.
சுவரில் சிறிய துளை, ஜன்னல் சந்து போன்றவவற்றுக்கு ஏற்ப இந்த ட்ரோன்களைச் சுருக்கி உள்ளே செலுத்திய அடுத்த நொடியில் மீண்டும் பழைய நிலைக்கே விரிவடையும். இது ட்ரோன்களின் நவீனமயமாக்களில் மைல் கல்லாகக் கருதப்படுகிறது.
அ.சர்ஃப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments