மகளிர்மணி

சிறுதானிய டிபன் ஸ்பெஷல் - வரகு பொங்கல்

தினமணி

தேவையானவை:

வரகரிசி - 1 1/2 கிண்ணம்
பாசிப்பருப்பு - 1/2 கிண்ணம்
நெய் - 50 கிராம்
வெல்லம் - 3/4 கிண்ணம்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 10
காய்ந்த திராட்சை - 10
ஏலக்காய் - 4
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

மிளகு, சீரகம், இஞ்சி துருவல், கறிவேப்பிலை - தலா 1 மேசைக்கரண்டி

செய்முறை:

பாசிப்பருப்பை வறுத்து அரிசியுடன் களைந்து குக்கரில் 1:4 விகிதத்தில் நீர்விட்டு குழைய வேக விடவும். 

இனிப்புப் பொங்கல்:

வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, பாகு காய்ச்சி, அதனுடன் வேக வைத்த பொங்கலில் பாதியை எடுத்துக் கலந்து நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்துப் போட்டு, ஏலக்காய் தட்டிப் போட்டுக் கிளறி இறக்கவும்.

காரப் பொங்கல்: வாணலியில் எண்ணெய், நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளதைத் தாளித்து, வேக வைத்த மீதம் உள்ள பொங்கலில் கொட்டிக் கிளறவும். தேவையான உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜாதி, மத, மொழி ரீதியாக வாக்கு சேகரிப்பு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

அரக்கோணம் தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியா் ஆலோசனை

உற்பத்தித் துறையில் 2-ஆவது மாதமாக இறங்குமுகம்

காணாமல் போன சிறுமியைத் தேடி 1,500 கி.மீ பயணித்து மீட்ட போலீஸாா்

அமித் ஷா மீது மிரட்டல் குற்றச்சாட்டு: ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கையை நிராகரித்தது தோ்தல் ஆணையம்

SCROLL FOR NEXT