மகளிர்மணி

பச்சைப்பயறு கிரேவி 

கவிதா சரவணன்

தேவையான பொருள்கள்:

பச்சைப் பயறு - 1 கிண்ணம்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு பல் - 3
இஞ்சி - 1 துண்டு
பிரிஞ்சி இலை - 1
மஞ்சள்தூள் -1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி,
சீரகதூள் -1 தேக்கரண்டி,
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
மிளகாய் தூள், எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பச்சைப் பயறை நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் காய்கறி, இஞ்சி, பூண்டை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதில், நெய், எண்ணெய் தலா ஒரு தேக்கரண்டி அளவுக்கு ஊற்றி சூடேற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடு ஏறியதும், அதில் சீரகம் போட்டு வெடிக்க வையுங்கள். ஒரு பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர், வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்தவுடன்அதில் நசுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டை சேர்த்து பச்சை வாசம் போக வதக்க வேண்டும். பின்னர், மஞ்சள்தூள், சீரகத் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, மிளகாய்தூள் ஆகியவற்றை சேர்த்துகொள்ள வேண்டும். மசாலா வாசனைபோகும் வரை நன்கு வதக்கிய பின்னர் நறுக்கிவைத்துள்ள தக்காளியை சேர்த்து மசியும் வரை வதக்க வேண்டும். அதற்கு பிறகு ஊற வைத்திருக்கும் பச்சைப் பயறை மீண்டும் தண்ணீர் ஊற்றி ஒரு முறை கழுவிவிட்டு சேர்க்க வேண்டும். ஐந்து விசில் வந்தபிறகு அடுப்பை அணைத்துவிட்டு, அதில் நறுக்கிவைத்த கொத்தமல்லித் தழைகளை போட்டு இறக்கினால் சுடச் சுட பச்சைப் பயிறுகிரேவி தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை

மதுபோதையில் காா் ஓட்டி விபத்து: காவலா் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருச்செந்தூா் முருகன் கோயில் திருப்பணி செய்த காசி சுவாமிக்கு குரு பூஜை

பெரியாா் பல்கலை.யில் இளம் விஞ்ஞானிகள் பயிற்சி முகாம் நிறைவு

காஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் கோயில் கருட சேவை

SCROLL FOR NEXT