முகப்பு
மகளிர்மணி

சமையல் டிப்ஸ்...

தேங்காய்ப்பால் எடுப்பதற்கு தேங்காய்த்துருவலை அரைக்கும் போது வெந்நீர் தெளித்து அரைத்தால், பால் கெட்டியாகக் கிடைக்கும்.

Updated On : 15 மார்ச், 2026 at 12:51 PM
பகிர்:

தேங்காய்ப்பால் எடுப்பதற்கு தேங்காய்த்துருவலை அரைக்கும் போது வெந்நீர் தெளித்து அரைத்தால், பால் கெட்டியாகக் கிடைக்கும்.

புளித்த மோர் இருந்தால், அதில் புழுங்கல் அரிசியும், உளுந்தம் பருப்பும் ஒரு மணி நேரம் ஊற வைத்து, தோசை மாவு பதத்துக்கு அரைத்து உடனே தோசை வார்க்கலாம். மாவு பொங்க வேண்டிய அவசியமில்லை. தோசை சுவை மிகுந்து இருக்கும்.

வெண்டைக்காய், பீன்ஸ் போன்ற காய்கள் முற்றலாக இருந்தால் தூக்கி எறிய வேண்டாம். அவற்றைத் துண்டுகளாக்கி தண்ணீரில் போட்டுக் கொதிக்க விடுங்கள். பிறகு வடிகட்டி உப்பு, மிளகு, சீரகப்பொடி சேர்த்து சூப்பாக அருந்தலாம்.

பச்சை மிளகாய் சேர்த்து சட்னி முதலியவற்றை அரைக்கும் போது முதலில் மிளகாயைத் துண்டுகளாக்கி வெந்

நீரில் போடவும். சற்று ஆறியதும் எடுத்து அரைத்தால் மிளகாய் நன்கு மசிவதுடன், சட்னி வெகு நேரம் கெட்டுப்போகாமலும் இருக்கும்.

கத்தரிக்காய், வாழைக்காய் போன்ற காய்கள் நறுக்கியதுமே கறுத்து விடும். இதைத் தவிர்க்க, தண்ணீரில் இரண்டு கரண்டி மோரை ஊற்றி, அதில் அந்தக் காய்கறித்துண்டுகளைப் போட்டால் காய்கள் சமைக்கும் வரை நிறம் மாறாமல் இருக்கும்.

-ஆர். கீதா, ஆலுவா.

 முந்திரி, பாதாம், கசகசா இவற்றை நீரில் ஊறவைத்து ஃபிரிட்ஜில் வைத்து பிறகு அரைத்தால் சீக்கிரம் அரைபடும்.

 சாதம் குழைந்து விட்டால் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கரண்டி காம்பால் கிளற பொல பொல என்றாகும்.

 சேமியா பாயசம் செய்யும் போது சேமியா வெந்ததும் ஒரு டம்ளர் குளிர்ந்த நீர்விட்டு பின் சர்க்கரை, பால் சேர்த்து செய்தால் சேமியா ஒன்றுடன் ஒன்று ஒட்டாது .

இட்லிப் பொடி செய்யும் போது ஒரு தேக்கரண்டி தனியாவை வறுத்து சேர்த்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

-நாகஜோதி கிருஷ்ணா, சென்னை-5.

முழு கட்டுரையைப் படிக்க →