சிறுவர்மணி

தாயுமானவர் பொன்மொழிகள்

DIN

1.நல்ல மனதுக்கு உலகம் நல்லதாகவும், கெட்ட மனதுக்கு உலகம் கெட்டதாகவும் தென்படுகிறது.

2.அன்பு அமைதியாக இருந்து, தடுமாற்றத்தைத் தவிர்த்து, கசப்பாய் இருப்பதை இனிப்பாக மாற்றும் தன்மை உடையது. எனவே, அன்புக்கு  ஈடு இணை கிடையாது.

3.நல்லெண்ணம் வளர வளர அது நமது உடலில் ஊறியதாக ஆகிவிடுகிறது. பிறகு கெட்ட எண்ணம் என்பதே வருவதில்லை. இது எல்லாவற்றிற்கும் அடிப்படை பழக்கமே.

4.ஒழுக்கத்தில் நிலைநின்றவர்களுக்கு மன உறுதி அதிகரிக்கிறது. பின்னர் அதுவே ஆத்ம சக்தியாக வடிவம் எடுக்கிறது.

5.கடவுள் படைப்பில் அற்பமானது என்று அலட்சியப்படுத்த ஒன்றுமே இல்லை.

6.ஒரு சிறு நெருப்புத் துளியும் எரியும் தன்மையுடையது. அதுபோல் மனிதனுடைய ஒரு சிறு செயலில் தோன்றும் குற்றமும் அவனைக் குற்றமுள்ளவன் எனப் படம்பிடித்துக் காட்டுகின்றது.

7.முறையுடன் உழைப்பவர் இறைவணக்கம் செய்கின்றனர்; முறையுடன் உழைப்பவர் முன்னேற்றம் அடைகின்றனர்; உழைக்கக் கற்றுக் கொள்பவர் வாழக் கற்றுக்கொள்பவர் ஆகின்றனர்.

8.நல்ல எண்ணம் நமக்கு நல்ல நலம் தந்து, வாழ்வினை வளமடையச் செய்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT