முகப்பு
சிறுவர்மணி

சேவல்!

கூரை மேலே ஏறியும் குப்பை மேட்டில் நின்றுமே ஊரை விழிக்கச் செய்கிறாய்!

Updated On : 29 ஆகஸ்ட் 2020, 6:00 am IST
பகிர்:

கூரை மேலே ஏறியும் 
குப்பை மேட்டில் நின்றுமே 
ஊரை விழிக்கச் செய்கிறாய்!
உந்தன் உரத்த குரலினால்!

"கொக்கரக்கோ' என்று நீ 
கூவும்போது அழகுதான்!
பூச்சி, புழுக்கள், தானியம்
பொறுக்கும் போதும் அழகுதான்!

கத்தி போல நிலத்தைக் கிளற
கால்கள்தானே ஆயுதம்!
கொத்தித் திரியும் குணத்தினை 
குழந்தை கூட ரசிக்குமே!

Advertisement

Advertisement

கொடிய அரக்கன் சூரனை 
கொன்று உன்தன் வடிவினைக்
கொடியாய்க் கொண்டு முருகனும் 
குன்று தோறும் அருள்கிறான்!

கோழியோடு குஞ்சுகளை 
குடும்பம் போலக் காக்கிறாய்!
"வாழி!' என்று உன்னையே 
வாய்குளிர வாழ்த்துவேன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments