முகப்பு
சிறுவர்மணி

கற்றுக்கொள்!

பூனை ஒன்றைப் பார்த்த எலிக்குட்டிகள் ரொம்பவும் நடுங்கின.

Updated On : 24 ஏப்ரல் 2021, 6:00 am IST
பகிர்:

பூனை ஒன்றைப் பார்த்த எலிக்குட்டிகள் ரொம்பவும் நடுங்கின. அவை உடல் நடுங்க தங்களது தந்தை எலியின் அருகே ஓடிச் சென்றன. தந்தை எலி தாவிக் குதித்து ஒரு பாறை மீது ஏறி நின்று,  ""லொள்!....லொள்!'' என்று நாய் போல் குரைத்துச் சத்தமிட்டது!

பயந்து போன பூனை ஓடிப் போய் விட்டது! ஆச்சரியமடைந்த எலிக்குட்டிகள், ""நீ நாம சத்தம் போடறமாதிரி கத்தலையே..... லொள்...லொள் என்று நாய் மாதிரி கத்தினியே,...  அந்தப் பூனை ஓடிவிட்டதே!.... அது எப்படி?'' என்றன.

""பூனைக்கு நாய்ன்னா பயம்!.... அதற்குத்தான் இரண்டாவது மொழி ஒன்றைக் கற்றுக் கொள்வது அவசியம்! என்று சொல்வது'' என்றது தந்தை எலி.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.