மஞ்சணத்தி இளையராஜாவுக்காகவே எழுதப்பட்டது: மாரி செல்வராஜ்
இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்திய மாரி செல்வராஜ்...
இயக்குநர் மாரி செல்வராஜ் இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இசையமைப்பாளர் இளையராஜா இன்று தன் 83வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். சினிமாவிலும் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ஆண்டு என்பதால் லட்சக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மாரி செல்வராஜ் இளையராஜாவை நேரில் சந்தித்து தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பின், பத்திரிகையாளர்களைச் சந்தித்தவர், ”இசையமைப்பாளர் இளையராஜாவின் 83-வது பிறந்த நாளில் நான் அவருடன் இணைந்திருப்பது என் வாழ்க்கையின் பெரிய தருணம். இந்த மிகப்பெரிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவரைச் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தேன்.
Advertisement
Advertisement
ராஜா சாருடன் எப்போது பணியாற்றுவது என்பது ஏக்கமாகவே இருந்தது. நான் சினிமா கற்றுக்கொண்டு அவரை அணுக வேண்டுமென இவ்வளவு நாள் காத்திருந்தேன். என் படங்களின் மீது அவர் பெரிய மரியாதை வைத்திருக்கிறார். மஞ்சணத்தியை எழுதும் போது முழுக்க, முழுக்க இளையராஜாவை நினைத்துக்கொண்டே எழுதினேன். இது அவருக்காகவே எழுதப்பட்டது” எனக் கூறினார்.
மாரி செல்வராஜ் இயக்கும் மஞ்சணத்தில் திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க, நடிகர்கள் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
Director Mari Selvaraj extended his birthday wishes to music composer Ilaiyaraaja.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.