தீர்க்கதரிசி!
அச்சம் தவிர்க்கச் சொல்லியே - புதிய ஆத்தி சூடி தந்தவர்!பழக்க வழக்கம் கற்றிட - நல்ல
அச்சம் தவிர்க்கச் சொல்லியே - புதிய
ஆத்தி சூடி தந்தவர்!
பழக்க வழக்கம் கற்றிட - நல்ல
பாப்பா பாட்டு சொன்னவர்!
பெண்கள் கல்வி பெறுவதை - நாட்டின்
பெருமை என்றே உணர்ந்தவர்!
அஞ்சிக் கிடந்த மக்களை - வீரர்
ஆக்கி வெற்றி கண்டவர்!
ஏட்டில் எழுதிப் பகைவரை - இங்கே
எதிர்த்துப் புரட்சி செய்தவர்!
அடையும் முன்னே சுதந்திரம் - நாம்
அடைந்ததாகச் சொன்னவர்!
Advertisement
Advertisement
கொஞ்ச காலம் வாழ்ந்தவர் - நம்
நெஞ்சமெல்லாம் நிறைந்தவர்!
தே சியக் கவித்தேர்ச் சாரதி - ஒரு
தீர்க்க தரிசி பாரதி!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.