FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கடி

""ராத்திரியிலே கொசுக் கடியிலேருந்து தப்பிக்க குட்நைட் வைக்கிறோம்... இப்போ பகல்லேயும் கடிக்குதுடி... என்ன பண்றது?''""குட்மார்னிங் வைச்சு பாரு!''

1 பிப்ரவரி 2024, 1:57 pm IST
பகிர்:


""ராத்திரியிலே கொசுக் கடியிலேருந்து தப்பிக்க குட்நைட் வைக்கிறோம்... இப்போ பகல்லேயும் கடிக்குதுடி... என்ன பண்றது?''
""குட்மார்னிங் வைச்சு பாரு!''

செ.பவித்ரா,
திருப்பூர்.

""முப்பது வயசாச்சு... இன்னும் ரோட்டுல போற நாய்க்குப் பயப்படுறியே...?''
""முப்பது வயசுன்னு எனக்குத் தெரியும்... நாய்க்குத் தெரியுமாப்பா...?''

Advertisement

Advertisement

எஸ்.அருள்மொழி சசிகுமார்,
கம்பைநல்லூர் - 635 202


""உதைப் பந்து வேணும்னு கேட்டியே... உங்கப்பா வாங்கித் தந்தாராடா?''
""இல்லடா... ரெண்டு விதைப் பந்தைக் கொடுத்து ஊருக்கு வெளியே வீசிட்டு வந்தால்தான் உதைப்பந்துன்னு சொல்லிட்டார்''

கோ.மஞ்சரி,
கிருஷ்ணகிரி.

""இந்தக் கையிலே ஒரு கால்குலேட்டர்... அந்தக் கையிலே ஒரு கால்குலேட்டர்... ஆக மொத்தம் எத்தனை?''
""அரைக்குலேட்டர் சார்...''

ச.சுப்புரெத்தினம்,
மயிலாடுதுறை.


""உங்கப் பேரன் நொறுக்குத் தீனியா வாங்கித் திங்கிறானே... அதை நிறுத்த சொல்லக்கூடாதா பாட்டி!''
""நான் சொன்னா உடனே நிறுத்திடுவான்...''
""அப்புறம் என்ன... சொல்ல வேண்டியதுதானே?''
""அட, எனக்குக் கொடுக்கிறத நிறுத்திடுவான்னு சொல்ல வந்தேன்...''

ஜி.சிவமீனா, 
விருதுநகர் (மாவ).

""கண்டெக்டர் சார்... மணிக்கூண்டு நிற்குமா?''
""அஸ்திவாரம் பலமா இருந்தா ரொம்ப காலத்துக்கு நிற்கும் தம்பி...''

டி.என் பாலகிருஷ்ணன்,
சென்னை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments