நான்கு பேர் பேயிடம் சிக்கும் கதை
'தனி ஒருவன்', "வழக்கு எண் 18/9", "ஒரு குப்பைக் கதை' உள்ளிட்ட பல படங்களின் படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா
'தனி ஒருவன்', "வழக்கு எண் 18/9", "ஒரு குப்பைக் கதை' உள்ளிட்ட பல படங்களின் படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா. இவர் தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். இவர் தொடங்கியுள்ள புது நிறுவனம் படத் தயாரிப்பில் இறங்கியுள்ளது. முதல் தயாரிப்பாக "நாயே பேயே' என்ற பெயரில் படம் உருவாகி வருகிறது. கலை தி ஆர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறது. "ஒரு குப்பைக் கதை' படத்தில் நடித்த நடன இயக்குநர் தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ஐஸ்வர்யா கதாநாயகியாக நடிக்கிறார். "ஆடுகளம்' முருகதாஸ், ஷாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, நிரன் சந்தர். இசை, என்.ஆர்.ரகுநந்தன். இயக்கம், சக்தி வாசன். ஒரு நாயை கடத்த முயற்சிக்கும் நான்கு பேர், தவறுதலாக பேயை கடத்துகின்றனர். பிறகு பேயிடம் சிக்கி தவிக்கும் அவர்களின் கதி என்ன என்பதை நகைச்சுவையாக சொல்லுவதே கதை. சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.