முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ரெட் லேபிள்

ரெவ்ஜென் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் லெனின் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம் 'ரெட் லேபிள்'.

Updated On : 8 பிப்ரவரி 2026, 4:31 pm IST
பகிர்:

ரெவ்ஜென் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் லெனின் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம் 'ரெட் லேபிள்'. இப்படத்தின் கதையை பொன். பார்த்திபன் எழுத, திரைக்கதை எழுதி, இயக்கியிருப்பவர் கே.ஆர். வினோத். சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். மேலும் லெனின், அஸ்மின், முனிஷ்காந்த், அனுமோகன் தருண், கெவின், கார்மேகம் சசி,அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு எழுந்துள்ளது. 'ரெட் லேபிள்' என்கிற பெயரைக் கேட்டதுமே டீத்தூள், மது வகை ஆகியவற்றின் வணிகப் பெயர் பலரது நினைவுக்கு வரலாம். ஆனால், அவை இரண்டுமே அல்ல. ரெட் என்பது புரட்சியையும், லேபிள் என்பது அடையாளத்தையும் குறிக்கும். ஒரு கொலையால், இழந்த அடையாளத்தை மீட்கப் போராடும் சில மனிதர்களின் கதை இது. கோவைதான் கதைக் களம். ஒரு குற்றமும், அந்தக் குற்றத்தைச் செய்யத் தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம்.

இங்கே குற்றம் என்பது நம்பிக்கை துரோகம். அந்த துரோகத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது; அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள். எல்லாவற்றையும் தீர்மானிக்கிற சக்தி உள்ள மனிதனால் எவ்வளவு காசு, பணம் கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கி விட முடியாது. மனித உறவுகளில் உள்ள சிக்கல்கள் ஏராளம். குறிப்பாக காதல்.

Advertisement

Advertisement

எண்ணங்கள் பொருந்திப் போனால்தான் எந்த விஷயமும் ஈடேறும். பிரியமானவர்கள் மீது காட்டுகிற அன்பு அவர்களை சந்தோஷப்படுத்த இல்லை. என்னை நானே சந்தோஷப்படுத்திக் கொள்ளத்தான் என்ற நிலை உருவானால், அந்த வாழ்க்கை என்னவாகும். அப்படியோர் பாதையில்தான் இந்தக் கதை பயணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments