ஃபிலிம் ரோலை அளந்தால் 600 கி.மீ. நீளம்! ஆச்சரியமளிக்கும் கிறிஸ்டோஃபர் நோலன்!
தி ஒடிசி உருவாக்கம் குறித்து...
ஒடிசி திரைப்படம் 20 லட்சம் ஃபிலிம் அடிகளால் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகின் மிகச்சிறந்த இயக்குநராக கருதப்படும் கிறிஸ்டோஃபர் நோலன் தற்போது ஒடிசி என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் ஜூலை 17 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
பிரபல கவிஞர் ஹோமர் எழுதிய ஒடிசி என்கிற கவிதையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரிய கவனத்தைப் பெற்றுள்ளதால் வெளியீட்டில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
இதைவிட ஆச்சரியமாக, இப்படத்தை முழுமையாக ஐமேக்ஸ் பிலிம் ரோல் கேமராவில் 20 லட்சம் அடிகள் வரை எடுத்துள்ளாராம். இதனை அளந்தால் 600 கி.மீ. நீளத்திற்குச் செல்லக் கூடியது எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதுவரை தான் இயக்கிய ஒவ்வொரு படங்களிலும் புதுமையான விஷயங்களைப் புகுத்திய நோலன், இப்படத்தில் முழுமையான ஐமேக்ஸ் காட்சியனுபவ விருந்தை அளிப்பார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
It is reported that the film Odyssey was shot using 2 million feet of film.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.