நடிகர் கார்த்திகேயாவின் புதிய திரைப்படம்!
குத்துச்சண்டை வீரராக நடிக்கும் கார்த்திகேயா....
நடிகர் கார்த்திகேயா தன் புதிய திரைப்படம் குறித்து அறிவித்துள்ளார்.
'ஆர்எக்ஸ் 100’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா தனது புதிய திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ’கம்பேக்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
கார்த்திகேயா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கார்த்திகேயா கிரியேட்டிவ் வொர்க்ஸ் சார்பில் இப்படத்தை உருவாக்குகிறார். இதில் கதாநாயகனாக நடிப்பதுடன், இயக்குநர் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அவரது மனைவி லோஹிதா ரெட்டி இப்படத்தின் தயாரிப்பாளராக உள்ளார். குடும்பத்தினர் இணைந்து தயாரிக்கும் இந்தத் திரைப்படம் 2027ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகிறது.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் நடிகர் கார்த்திகேயா பாக்ஸராக நடித்துள்ளார் என்பதை கிளிம்ப்ஸ் காட்டுகிறது. மூன்று ஆண்டுகளாக அந்த குத்துச்சண்டை வீரர் குறித்து எந்தத் தகவலும் இல்லை என்பதை சுட்டிக்காட்டும் குரலோடு கதை தொடங்குகிறது.
இப்படத்தின் கிரியேட்டிவ் குழுவில் விஜய் புல்கானின் இசையமைப்பாளராகவும், கல்யாண் சூர்யபிரகாஷ் படத்தொகுப்பாளராகவும், ஷில்பா தங்குதுரு ஆடை வடிவமைப்பாளராகவும், சூர்யா அக்கெல்லா கிரியேட்டிவ் இயக்குநராகவும் இடம்பெற்றுள்ளனர். ஜெகதீஷ் சீகட்டி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார் மற்றும் சுதீர் தெலப்ரோலு நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
Actor Kartikeya has announced his new film.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.