ஒரு ஜாலிக்கு ஆடினேன்... லிங்குசாமி விளக்கம்!
வைரலான தன் நடனம் குறித்து லிங்குசாமி விளக்கம்...
இயக்குநர் லிங்குசாமி தன் நடனம் குறித்து விளக்கமளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குநர் லிங்குசாமிக்கு எப்போதும் நல்ல இடம் உண்டு. ஆனந்தம் திரைப்படம் மூலம் சினிமாவுக்குள் வந்தவர் தொடர்ந்து ரன், சண்டைக்கோழி, பையா என வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார்.
நடிகர் சூர்யாவை வைத்து இவர் இயக்கிய அஞ்சான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதன்பின், லிங்குசாமிக்கு எந்த வெற்றிப்படமும் அமையவில்லை.
Advertisement
Advertisement
அண்மையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட லிங்குசாமி வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் இடம்பெற்ற, ’அவ என்னைத் தேடி வந்த அஞ்சலை' பாடலுக்கு நடனமாடினார். இதனைக் கண்ட ரசிகர்கள் ரசித்து மகிழ்ந்தாலும் சிலர், ‘லிங்குசாமி மேல் நல்ல மதிப்பு இருக்கிறது; ஏன் இப்படி ஆடிக்கொண்டு அதைக் கெடுக்கிறார்’ என்கிற ரீதியில் விமர்சித்தும் வந்தனர்.
இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து பேசிய லிங்குசாமி, “இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களுக்கான இசை நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெற்றது. நானும் அங்கு சென்றிருந்தேன். அப்போது, வாரணம் ஆயிரம் பாடலுக்கு ஜாலியாக நடனமாடினேன். நான் தேர்ச்சி பெற்ற நடனக்கலைஞர் கிடையாது. இருந்தாலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஆடினேன். இதுகுறித்த பாராட்டுகளையும் விமர்சனங்களையும் கண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Director Lingusamy has explained his dancing.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.