FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அஞ்சாதே - 2 வருமா? இயக்குநர் மிஷ்கின் பதில்!

அஞ்சாதே - 2 திரைப்படம் குறித்து மிஷ்கின் பேச்சு...

இயக்குநர் மிஷ்கின்
பகிர்:

இயக்குநர் மிஷ்கின் அஞ்சாதே - 2 திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் மிஷ்கின் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான சத்தியவான் சாவித்திரி திரைப்படம் நவ. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisement

Advertisement

இதன் முன்வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் மிஷ்கினிடம், ”அஞ்சாதே திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாமே?” எனக் கேட்கப்பட்டது.

அதற்கு மிஷ்கின், “ஒரு திரைப்படத்தின் இரண்டாம் மூன்றாம் பாகம் என்பதே சரியாகப்படவில்லை. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் நரேனை வைத்து அஞ்சாதே - 2 திரைப்படத்தை இயக்கச் சொன்னார். நரேனும் வந்தார்; ஆனால், அது கட்டாயப்படுத்துவது போல் ஆகிவிடக்கூடாது. இரண்டாம் பாகத்தில் என்ன எடுப்பது? இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நான் திரைப்படம் எடுக்கிறேன். கண்டிப்பாக, இந்த இருவருடனும் பணியாற்றுவேன். ஆனால், அது அப்போது தோன்றிய விஷயமாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர்கள் நரேன், பிரசன்னா, அஜமல், விஜயலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான அஞ்சாதே திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது குறிப்பிடத்தக்கது.

Director Mysskin has spoken about the film Anjathey 2

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.