FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கீர்த்தி சுரேஷுக்கு தங்க மோதிரத்தை கழற்றிக் கொடுத்த மிஷ்கின்! ஏன்?

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு இயக்குநர் மிஷ்மின் அளித்த பரிசு குறித்து...

கீர்த்தி சுரேஷுக்கு மோதிரம் பரிசளிக்கும் மிஷ்கின்
பகிர்:

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு இயக்குநர் மிஷ்மின் மோதிரம் பரிசாக வழங்கியுள்ளார். டோரதி படத்தை தேர்வு செய்ததற்காகவும் அதில் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்ததற்காகவும் இப்பரிசை அவர் வழங்கினார்.

கீர்த்தி சுரேஷ், இயக்குனர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள சத்தியவான் சாவித்திரி திரைப்படம் வரும் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisement

Advertisement

இதனையொட்டி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது:

"நடிகர்களை அவர்கள் போக்கில் நடிக்க விடுவதே எனக்கு வசதியாக இருக்கிறது. நடிகர்களுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும். எனக்கு அப்படி ஒரு சுதந்திரம் இந்தப் படத்தில் கிடைத்தது.

நடிகனாக இருப்பது கவலையாக இருக்கிறது. நேர மேலாண்மை செய்வதற்கு கடினமாக இருக்கிறது. இந்த டிசம்பரோட நடிப்பதை நிறுத்தி விடலாமா? என யோசிக்கிறேன்.

அந்த வகையில் நடிகர்களை பாராட்ட வேண்டும். எனது மகள் போலவே கீர்த்தி சுரேஷ் இருக்கிறார். கீர்த்தி சுரேஷ் நடித்த படங்களில் டோரதி மட்டுமே நான் பார்த்துள்ளேன். டோரதி படத்தைப் பார்க்கும் போது இதயத்தைத் தொட்டுவிட்டது." எனக் குறிப்பிட்டார்.

சத்தியவான் சாவித்திரி திரைப்படத்தை பிரவீன் எஸ். விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வழக்குரைஞராக நடித்துள்ளார். அவருக்கு எதிராக வாதிடும் வழக்குரைஞராக மிஷ்கின் நடித்துள்ளார்.

இவர்களுடன் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சாம். சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

summary

Director Mysskin gifts a ring to Keerthy Suresh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.