FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சசிகுமாரின் புதிய திரைப்படப் பெயர்!

சசிகுமார் நடிக்கும் திரைப்படத்தின் பெயர்...

பகிர்:

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

’யாத்திசை' திரைப்பட இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கும் புதிய திரைப்படத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ளார். இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் இந்தியாவிற்குள் நுழைய பர்மா மீது படையெடுத்த போது நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இதில் சேயோன், பவானி, சமுத்திரக்கனி, ஷிவதா, கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் அசோக் செல்வன் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.

ஜே.கமலக்கண்ணனின் ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்துக்கு சேது முருகவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்தக் கல்யாணி இசையமைக்கிறார்.

Advertisement

Advertisement

படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில், இப்படத்திற்கு டெத் இரயில்வே (Death railway) எனப் பெயரிட்டுள்ளதாக டீசர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இரண்டாம் உலகப்போருக்கான காட்சிகளுடன் கூடிய இந்த டீசர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

The title of the new film starring actor Sasikumar has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.